தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Valluvan Media
0

 உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01) பவுணுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினத்தில் அதன் விலை 379,000 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.



தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 379,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 348,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,588 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதன் தாக்கம், உள்நாட்டு சந்தையிலும் தொடர்ந்து பிரதிபலித்து வருவதால், தங்கத்தின் விலையில் இவ்வாறான மாற்றங்கள் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top