ஏற்ற இறக்கத்தோடு தங்கத்தின் விலை! நிலை தடுமாறும் நகைப்பிரியர்கள்

Valluvan Media
0
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (04.04.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



அண்மையில் 3 இலட்சம் ரூபாவை நெருங்கிய தங்கதின் விலையானது தற்போது மீண்டும் உயர்ந்து நான்கு இலட்சம் ரூபாவை தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலக சந்தையில் இன்றைய தினம் (04.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.இது முதல் தினத்துடன் ஒப்பிடுகையில் +23.77 (+0.51%) வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இலங்கை சந்தையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 48,520 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 44,480 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top