இலங்கைக்கு எரிபொருள் தொடர்பில் மற்றுமொரு சிக்கல்! அரசின் அதிரடி திட்டம்

Valluvan Media
0

 இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் கிடைப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடிப்பதாகத் தெரியவருகிறது.




இதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையாத நிலையில், அமெரிக்கா வழங்கிய ஒரு மாத கால தடையில்லா விலக்கு எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதியுடன் முடிவடையுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் மற்றும் உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டமை ஆகியவற்றால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியைத் தவிர்க்க இலங்கை அரசாங்கம் ரஷ்யாவின் உதவியை நாடியிருந்தது.

இதனை முன்னிட்டு, மார்ச் இறுதியில் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் மற்றும் வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இதன்போது, அமெரிக்க நலன்களுக்கு அப்பாற்பட்டு இலங்கையுடன் நீண்டகால எரிசக்தி ஒத்துழைப்பை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், இலங்கை தனது வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய முன்பதிவு செய்துள்ளது.

இந்த எண்ணெய் கப்பல் எதிர்வரும் மே மாதம் நாட்டை வந்தடையும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் ,WTI மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் இலங்கை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 'முர்பன்' (Murban) ரக எண்ணெய்யையே இறக்குமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top