அரச ஊழியர்களுக்கு சற்றுமுன் பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Valluvan Media
0

 அரச சேவைகளை எவ்வித இடையூறுமின்றி சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது.




பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.
பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பொதுநிர்வாகம், சுகாதாரம், கல்வி மற்றும் நீதி ஆகிய முக்கிய அமைச்சுகளின் சேவைகளைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களைத் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் தொடருந்து போக்குவரத்துத் துறையில் நிலவும் சவால்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்தை தடையின்றி மேற்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரச சேவைகளை விரைவுபடுத்துவதற்காக 'டிஜிட்டல்' சேவை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தவும், வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமையை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் கண்காணிப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டது.

அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தற்போதைய வலுசக்தி முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளுமாறு இதன்போது பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top