மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அதிரடி அறிவிப்பு

Valluvan Media
0

 மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையின் மத்தியில் அந்த நாடுகளிலுள்ள இலங்கையர்களின் விசாக்கள் காலாவதியாகி வருவதாகவும் விசாக்களை புதுப்பிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காத சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இராஜதந்திர ரீதியாக தலையிட்டு தேவையான ஒதுக்கீடுகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 



மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு எழுந்துள்ள விசா பிரச்சினைக் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.


அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,



மத்திய கிழக்கு நாடுகளின் வான் பரப்புகள் திறக்கப்படுமாக இருந்தால், வான் பரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்திலேயே வன்பரப்பை திறப்பார்கள். 


வான்பரப்பு திறக்கப்பட்டு அந்த நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கையர்களை அந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதே பாதுகாப்பான நடைமுறையாக இருக்கும். அதனால் அபாயமும் ஏற்படாது. தற்போதைய சந்தர்ப்பத்தில் அதற்கு இடமளிக்கிறோம்.



தனிப்பட்ட ரீதியில் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கான உதவியாகவும் நாடு என்ற அடிப்படையில் நாங்கள் பெற்றுக்கொடுத்து வந்த எங்களின் கடமைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.




இஸ்ரேல், ருமேனியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களின் விசாக்கள் காலாவதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அந்த நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு விசா வெளியிடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து இன்னும் ஆரம்பிக்கப்படாததால் அவர்களுக்கான விசாக்களின் காலமும் கடந்து சென்றுள்ளது.




யுத்த சந்தர்ப்பங்களில் கடந்த காலங்களில் சில நாடுகள் விசா காலாவதியாகும்போது அதனை புதுப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்கள். இம்முறையும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.




ஒருசில நாடுகள் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் விசாக்களை புதுப்பிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாயய்ப்பு அமைச்சு இராஜதந்திர ரீதியாக தலையிட்டு தேவையான ஒதுக்கீடுகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.



அரச ஊழியர்களுக்கு சற்று முன் பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top