தங்கம் வாங்க காத்திருந்தவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! எகிறியது தங்கத்தின் விலை

Valluvan Media
0

 இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (26) மாற்றங்கள் எதுவுமின்றி அதே விலையில் தொடர்வதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.




சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி தீவிரமாக அதிகரித்துள்ளமையால், கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டு சந்தையில் நிலவும் அதிக கேள்வி காரணமாக தங்கம் தொடர்ந்தும் உச்ச விலையிலேயே நீடித்து வருவதாக வர்த்தக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top