பாடசாலை மாணவர்களுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல்!

Valluvan Media
0

 பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட புத்தகங்களின் விலைகளை 18 சதவீதத்தால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் காமினி மொரகொட தெரிவித்துள்ளார்.



பயிற்சிப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பெறுமதி சேர் வரி (VAT) நீக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் இந் விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை (12) சமர்ப்பித்த ஜனாதிபதி, புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத பெறுமதி சேர் வரியை நீக்குவதாக அறிவித்துள்ளமை பெரிதும் வரவேற்கத்தக்கது.

எனினும், இந்த வரி நீக்கத் தீர்மானம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பில் இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட ஏனைய புத்தகங்களின் விலைகளை 18 சதவீதத்தால் குறைக்க எமது சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை எளிமையாகக் கூறுவதானால், 10,000 ரூபா பெறுமதியான புத்தகப் பட்டியலைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் ஒருவருக்கு, இந்த விலைக் குறைப்பின் மூலம் சுமார் 2,000 ரூபா வரை பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top