அரச வேலைக்காக காத்திருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

Valluvan Media
0

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் அரச சேவையில் இதுவரை சுமார் 40,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.



அரசியல் தலையீடுகள் இன்றி, வெளிப்படையான மற்றும் தகுதியின் அடிப்படையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (13) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மொத்த அரச செலவீனத்தில் 12 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.

4,570க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு Smart Board வசதிகளும், 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.அரச சேவையை அரசாங்கம் மலினப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். இவர் கடந்த காலங்களில் எவ்வாறான அடிப்படையில் அரச சேவைக்கு நியமனங்களை வழங்கினார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

அரசியல் பரிந்துரைக்கு அமைய நாங்கள் எவருக்கும் நியமனங்களை வழங்கவில்லை. தகுதி மற்றும் போட்டிப்பரீட்சை ஊடாகவே அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி தகைமைக்கு அமைய நியமனங்களை பெற்றால் தான் அரச சேவையாளர்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் சேவையாற்றுவார்கள்" என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top