வங்கி சென்று திரும்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி; 20 வயது யுவதிக்கு நடந்தது என்ன?

Valluvan Media
0

 கொழும்பு – பாதுக்கைப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயது யுவதி ஒருவர், தனது அறையில் அசைவற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியையும்  துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



மதியம் பெற்றோர் வங்கித் தேவைக்காக வெளியே சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. திரும்பி வந்து பார்த்தபோது மகள் படுக்கையில் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யுவதியின் மரணம் குறித்த  காரணம் வெளியாகாத  நிலையில்  இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரேதப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இளம்  யுவதியின்   திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top