18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அரசின் 10,000 ரூபா கொடுப்பனவு! யார் யாருக்கு கிடைக்கும்?

Valluvan Media
0

 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள “அனைவருக்கும் ஒரு பங்கு” என்ற திட்டத்தின் கீழ் உயர்தர மாணவர்களுக்கு கொழும்புப்  பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக 10,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த திட்டத்திற்கு 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். 

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) முன்மொழிவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.கிராமப்புறப் பாடசாலைகள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.இதற்கமைய, 13ஆம் தர மாணவர்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்து, குறுகியகாலப் பயிற்சிநெறியொன்றைத் தொடர்ந்து நடத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், குறித்த நிதியைப் பயன்படுத்தி அலகு நம்பிக்கை நிதியங்கள் (Unit Trusts) அல்லது நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிதியியல் அறிவை மேம்படுத்துதல், மாணவர்களுக்கு உலகப் பொருளாதாரம் குறித்த புரிதலை ஏற்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாகி, கொழும்புப் பங்குச் சந்தையின் ஊடாக மூலதனத்தைத் திரட்டுவதற்கு அவர்களை வலுப்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

மேலும், ஆறாம் தரம் முதல் தொழில்முனைவோர் கல்வி மற்றும் நிதியியல் அறிவை பாடசாலைப் பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், 100 பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் 100 முதலீட்டுக் கழகங்களை ஆரம்பித்து, மாணவர்களுக்கு பங்குச் சந்தை மற்றும் முதலீடு தொடர்பான அறிவை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top