தீவிரமாக பரவும் டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

Valluvan Media
0

 இலங்கையில் இந்த வருடம் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தமாக 89,395 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 4,048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,973 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாட்டில் நுளம்புக் குடம்பிகளின் அடர்த்தி தற்போது குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக டெங்கு நோய் பரவலும் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், தேங்கி நிற்கும் நீர் காணப்படும் இடங்களை அகற்றுவதிலும் பொதுமக்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top