ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்தவிதத் திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் தற்போதைய பழைய விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் மற்றுமொரு முக்கிய எரிவாயு விநியோக நிறுவனமான லிட்ரோ எரிவாயு நிறுவனமும் ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொதுமக்கள் எரிவாயு விலையேற்றம் குறித்த கவலைகளின்றி முந்தைய விலையிலேயே எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
