அதிகரித்தது பேருந்து கட்டணம் : சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0

 பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள ஆகக் குறைந்த பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 



இந்த புதிய கட்டண திருத்தம் எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண சேவையின் கீழ் இயங்கும் பேருந்துகளுக்கான கட்டணத்தைப் பொறுத்தவரை, 100 கிலோமீற்றருக்கும் குறைவான பயணத் தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றர் அல்லது அதற்கும் மேற்பட்ட பயணத் தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை, முதல் 100 கிலோமீற்றர் பயணத் தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிகமான பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top