வாகனம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! அவதானமாக இருங்கள்...

Valluvan Media
0

 சில வாகன இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும்



 என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பி, நுகர்வோரை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தேவையற்ற அச்சத்தை சந்தையில் உருவாக்குவதன் மூலம், நுகர்வோர் அதிக விலைக்கு வாகனங்களை வாங்குவதற்கு தூண்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாற்று விகிதங்கள் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்ட கொள்கை உடன்படிக்கைகளின்படி, எதிர்காலத்தில் வாகனங்கள் அல்லது வேறு எந்தப் பொருட்களினதும் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

மேலும், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அவரால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகளில்கூட, புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! அவதானமாக இருங்கள்...

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top