இந்திய பெண் செய்த அட்டூழியம்! ஆடைகள் கொள்வனவில் நடந்த அசம்பாவிதம்!

Valluvan Media
0
இந்தியாவில் இருந்து ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக தொடர்பு கொண்ட நபருக்கு இந்திய ரூபாய் 20,000 அனுப்பப்பட்டது. பணம் அனுப்பப்பட்ட பின்னர், குறிப்பிட்ட காலம் வரை தொடர்பில் இருந்து பொருட்கள் அனுப்பப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

எனினும், காலக்கெடு கடந்த பின்னரும் பொருட்கள் கிடைக்கவில்லை. பணத்தை மீள வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தத் தெளிவான பதிலும் அல்லது பண மீளளிப்பும் வழங்கப்படவில்லை.

தொடர்புடைய தகவல்கள்:
• WhatsApp பெயர்: Saree India
• தொலைபேசி இலக்கம்: +91 97507 042**
• UPI ID: ravishankar55**-1**oksbi
• UPI தொடர்புடைய இலக்கம்: 75488379**

பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள், WhatsApp உரையாடல்கள், குரல் பதிவுகள் மற்றும் பிற சான்றுகள் அனைத்தும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக இணையவழி குற்றப்புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சுமூகமாக முடிவடைய வேண்டுமென விரும்பப்படுவதால், வழங்கப்படாத பொருட்களுக்கான தொகையை மீள வழங்குமாறு மீண்டும் கோரப்படுகிறது. பணம் மீள வழங்கப்பட்டால், இவ்விவகாரம் மேலும் பெரிதுபடுத்தப்படாமல் முடிக்கத் தயாராக
இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சிறு முயற்சியாக சிறு தொழிலாக ஆரம்பிக்க இருந்த இந்த நிலையில் இவ்வாறு ஏமாற்றப்பட்டதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குறித்த பெண் பேசிய ஆடியோ


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top