1,600 பேருக்கு அரச வேலைவாய்ப்பு : அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Valluvan Media
0

 அரசாங்க பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி 100 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.






இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன , பொதுச்சேவையில் தற்போது நிலவி வரும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதே இந்த வேலைவாய்ப்புகளின் முதன்மை நோக்கம் என தெளிவுபடுத்தினார்.

இவற்றுக்கு மேலதிகமாக, தகுதிவாய்ந்த 1,600 முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top