Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

மீண்டும் ஒரு புயலா? அடுத்த சில மணி நேரங்களில் நடக்கப்போவது என்ன!

 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ​




வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று (14) மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (15) காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தீவிரமாக காணப்படுவதுடன், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அது இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினாலான பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் சுமார் 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 38 நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்தச் செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக