நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (மே 15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மழையுடனான வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
