நாட்டை புரட்டி போட்ட கனமழை! திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 இன்று (13) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் பல பாகங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




இதில் கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிக மழைவீழ்ச்சி பதிவான முக்கிய இடங்கள்:

பிலியந்தலை (கொழும்பு மாவட்டம்): 198.50 மி.மீ

கலகொட (இரத்தினபுரி மாவட்டம்): 147.40 மி.மீ

இரத்தினபுரி நகரம்: 94.00 மி.மீ

யால்கும்புர (மொனராகலை மாவட்டம்): 90.60 மி.மீ

சமனலகம (இரத்தினபுரி மாவட்டம்): 86.20 மி.மீ

உடுவர (பதுளை மாவட்டம்) மற்றும் வதுரவில (காலி மாவட்டம்): தலா 85.80 மி.மீ

மேலும், கொழும்பு 7 பகுதியில் 82.00 மி.மீ மழைவீழ்ச்சியும், ஜாவத்தை பகுதியில் 76.20 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல பகுதியில் 73.60 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் ஓப்பநாயக்க பகுதியில் 67.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெலிகம பகுதியில் 51.20 மி.மீ மழையும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பகுதியில் 54.00 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top