இருளில் மூழ்குமா? இலங்கை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Valluvan Media
0

 நாட்டில் எக்காரணம் கொண்டும் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு. இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.




தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை, செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம் தற்போதைய நிலைமை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

2025-2026 ஆம் ஆண்டிற்கான நிலக்கரி கொள்வனவு செயன்முறையில் ஏற்பட்ட சில குறைபாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், அதன் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top