திடீர் திடீரென ஆட்டம் காணும் தங்கத்தின் விலை! இன்று பவுணின் விலை?

Valluvan Media
0

 இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (03) காலை தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.




இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 1,000 ரூபாயால் அதிகரித்து 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 1,000 ரூபாயால் அதிகரித்து 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் டொலரின் பெறுமதி மாற்றங்களுக்கு அமைய, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இவ்வாறான தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top