தள்ளாடும் தங்கத்தின் விலை! நகைவாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

Valluvan Media
0

 சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (19) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.




அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,831.23 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 80.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் ஆகியன இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

குறிப்பாக, மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

எனினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை அதிகரிப்பு காரணமாக, வரும் நாட்களில் இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top