வைத்தியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (04) நண்பகலுடன் நிறைவடைந்தன. 



 
இந்த ஆண்டு பயிற்சியை முடித்த 453 வைத்தியர்களில் 435 பேர் அல்லது 96 சதவீதமானோர் நியமனங்களுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வைத்திய அதிகாரிகள் நியமனங்களுக்கு அவர்கள் எவ்வாறு விண்ணப்பித்துள்ளனர் மற்றும் அவர்களின் திறமைப் பட்டியல்  ஆகியவற்றின் அடிப்படையில், புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. 
 
வெளிப்படைத்தன்மையுடனும் அறிவியல் பூர்வமான  முறைமையின் கீழும் மேற்கொள்ளப்படும் இந்த நியமனங்கள் ஊடாக, நாடு முழுவதும் நிலவும் வைத்தியர்களுக்கான தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது. 
 
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள சேவை நிலையங்கள் மற்றும் பணியில் இணைய வேண்டிய திகதி போன்ற விபரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top