சமையல் எரிவாயு தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

Valluvan Media
0

 எதிர்வரும் நாட்களில் இலங்கையில் லாக்ஃப்ஸ் எரிவாயுவை நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி விநியோகிக்க லாக்ஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  




7,000 மெட்ரிக் டொன் எல்.பி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைமை அதிகாரி நலிந்த குருகுலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.இதற்கமைய, எரிவாயு விநியோகம் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், மே மாதத்திற்குத் தேவையான 33,000 மெட்ரிக் டொன் எல்பி எரிவாயுவை ஏற்றி வந்த மற்றொரு சரக்குக் கப்பல் ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டினை வந்தடையும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top