விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள விசேட நிதி நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி செய்தி

Valluvan Media
0

 2025 நவம்பர் மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள், மரக்கறி மற்றும் பழச் செய்கைகளைத் துரிதமாக மீள்பயிரிடல் செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் போன்ற சிறு ஏற்றுமதிப்பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை முன்னதாகவே, அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் போன்ற பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்க வேண்டிய தேவை குறித்து பெருந்தோட்ட அமைச்சினால் திறைசேரிக்கு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கயை, தேயிலைச் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரேயர் ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் வரையும், இறப்பர் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரேயார் ஒன்றுக்கு 4 இலட்சம் ரூபாய் வரையும் தெங்கு செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரேயார் ஒன்றுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top