விசாரணைக்கு அழைக்கப்படும் கோட்டா : சிக்குவாரா? வெளிவரும் தகவல்கள்!

Valluvan Media
0

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.




எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்காக இவ்வாறு கோட்டபாய அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் ஒரு தடவை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தான் சிங்கப்பூருக்கு பயணம் செய்வதால் குறித்த திகதியில் முன்னிலையாக முடியாது என கோட்டாபய ராஜபக்ச கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
எனவே தமக்கு வேறு ஒரு திகதியை ஒதுக்கி தருமாறு கோட்டாபய ராஜபக்ச எழுத்து மூலம் கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு அமைவாக இந்த மாதம் 17ஆம் திகதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றின் சில வீடுகளை சட்டத்திற்கு முரணான வகையில் சிலருக்கு வழங்குவதற்காக பரிந்துரை செய்து கடிதங்கள் வழங்கியமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top