Top News

10 நிமிடத்தில் அதிரடி காட்டிய இலங்கை பொலிஸ்! அதிர்ந்துபோன சுவிஸ்காரர்

 இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து நாட்டு ஆசிரியர் ஒருவருக்கு, தம்புள்ளை பொலிஸார் செய்த உதவி தற்போது இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.




​நடந்தது என்ன?
​சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜியான் முல்லர் (Gian Muller) என்ற ஆசிரியர், கண்டியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பேருந்தில் பயணித்தார். மாலை 6.30 மணியளவில் தம்புள்ளையில் இறங்கிய அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. தனது விலையுயர்ந்த ஐபோன் (iPhone) பேருந்திலேயே தவறிவிட்டதை அவர் உணர்ந்தார்.
​"அந்தத் தொலைபேசியில் எனது பல வருட கற்பித்தல் ஆவணங்கள் மற்றும் மிக முக்கியமான கோப்புகள் இருந்தன. அது தொலைந்தது என் உயிரே போனது போல இருந்தது," என முல்லர் பின்னர் கண்ணீருடன் தெரிவித்தார்.

​மின்னல் வேக நடவடிக்கை ⚡
​பதற்றமடைந்த முல்லர், தம்புள்ளை நகரில் கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட்டை அணுகினார். அங்குதான் அந்த 'மேஜிக்' நடந்தது..
​முல்லர் வைத்திருந்த பயணச்சீட்டை (Bus Ticket) வைத்து உடனடியாக பேருந்து உரிமையாளர் தொடர்பு கொள்ளப்பட்டார்.
​சாரதி மற்றும் நடத்துனருக்கு அவசரத் தகவல் வழங்கப்பட்டு, பேருந்தின் CCTV கேமராக்கள் சோதிக்கப்பட்டன.
​சரியாக 10 நிமிடங்களில், "தொலைபேசி கிடைத்துவிட்டது, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறோம்" என்ற தகவல் வந்தது!

​பணத்தை மறுத்த நேர்மை! 💰❌
​தனது 'உயிரை' மீட்டெடுத்துத் தந்த பொலிஸாருக்கு நன்றிக்கடனாக முல்லர் பணம் வழங்க முன்வந்தார். ஆனால், அதனை மென்மையாக மறுத்த தம்புள்ளை பொலிஸார்..
"இது எங்களது கடமை. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பது எமது பொறுப்பு," என கம்பீரமாகப் பதிலளித்தனர்.
​தனது தொலைபேசியை மீளப் பெற்ற முல்லர், பொலிஸாரின் இந்த மனிதாபிமானத்தையும் வேகத்தையும் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தற்போது இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் இலங்கை பொலிஸாருக்குப் பெருமையைத் தேடித்தந்து வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post