எதிர்பாராத வீழ்ச்சியில் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

Valluvan Media
0

 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.




இதற்கமைய, உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,072.20 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 
இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 410,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், நேற்றைய தினம் 381,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுன் 1,800 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 379,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் உள்நாட்டு தங்கச் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top