மாணவியை மிருகத்தனமாக கொலை செய்த கொடூரம்! தலையும் துண்டிப்பு

Valluvan Media
0

 விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதத்தன்மையே இல்லாத ஒரு மிருகத்தனமான செயல்.




ஒரு மாணவி இயற்கை உபாதைக்காக வெளியே சென்றபோது உயிருடன் திரும்ப முடியாத நிலை வந்திருப்பது தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை இத்தகைய சம்பவங்களில் வார்த்தைகளால் அல்ல, கடுமையான செயல்களால் பதில் சொல்ல வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

ஒரு மாணவியின் உயிர் இழந்த பிறகே நடவடிக்கை என்றால் அது நிர்வாக தோல்வி. இனிமேலும் இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்காதபடி அரசு விழித்துக் கொள்ள வேண்டும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top