இரவு தூங்கிய நபர் காலையில் நீலநிறமாக மாறிய அதிசயம் - இதுதான் காரணமா?

Valluvan Media
0

 பிரித்தானியாவைச் சேர்ந்த 47 வயதான லின்ச் என்ற நபர், காலையில் தூங்கி எழுந்தவுடன் தனது உடல் முழுவதும் நீல நிறமாக மாறியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.



'அவதார்' திரைப்படக் கதாபாத்திரத்தைப் போலவே அவர் காட்சியளித்ததால் பதற்றமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

ஆனால், அவரது உடல்நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் நீல நிறம் மாறாததால், சந்தேகமடைந்து அவர் பஞ்சினால் உடலைத் துடைத்துப் பார்த்தபோது, பஞ்சில் நீல நிற சாயம் ஒட்டியுள்ளது.இதன் பின்னரே உண்மை தெரியவந்துள்ளது.



அவர் இரவு போர்த்தியிருந்த போர்வையில் இருந்த சாயம், தூக்கத்தின் போது ஏற்பட்ட வியர்வையுடன் கலந்து அவரது உடல் முழுவதும் ஒட்டியுள்ளது.

இந்த சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top