Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி

 இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) ஒரே நாளில் மூன்று தடவைகள் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.





இதன்படி, இன்று ஒரு நாளில் மாத்திரம் இதுவரை 20,000 ரூபாயால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 370,000 ரூபாயாகவும், பின்னர் 375,000 ரூபாயாகவும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் 10,000 ரூபாயால் உயர்ந்து ஒரு பவுண் தங்கம் 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக