பாடசாலை மாணவிகளுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல்

Valluvan Media
0

 2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.




பாடசாலை மாணவிகளின் தொடர் கல்வியை உறுதி செய்யும் நோக்கில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் தரம் 6 இற்கு மேல் கல்வி பயிலும் சுமார் 1.05 மில்லியன் (10 இலட்சத்து 50 ஆயிரம்) மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவிக்கு தலா 1,440/- ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் தலா 720/- ரூபா பெறுமதியான இரண்டு வவுச்சர்கள் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனடிப்படையில், தலா 120/- ரூபா பெறுமதியான 08 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட 12 பக்கெட்டுகள், அல்லது, தலா 180/- ரூபா பெறுமதியான 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட 08 பொதிகளை பெறும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரார் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top