ட்ரம்பின் அறிவிப்பால் இலங்கையின் வங்கிகளில் அதிரடி மாற்றம்!

Valluvan Media
0

 ஈரான் உள்கட்டமைப்புகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள்  இன்று(24.03.2026) வளர்ச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.




இதன்படி, அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 3.31 சதவீதம்(674.80 புள்ளிகள்) உயர்ந்து 21,039.77 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, S&P SL 20 குறியீடு 3.57 சதவீதம்(202.93 புள்ளிகள்) உயர்ந்து 5,889.75 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கொமர்ஷல் வங்கி  (5.49% உயர்ந்து ரூ.201.75), சம்பத் வங்கி (2.98% உயர்ந்து ரூ.155.75), மெல்ஸ்டாகார்ப் (2.14% உயர்ந்து ரூ.167.00) மற்றும் டிஎஃப்சிசி வங்கி (4.45% உயர்ந்து ரூ.135.00) ஆகியவை சந்தையில் அதிக நேர்மறை பங்களிப்பை வழங்கியுள்ளன.

சந்தையின் மொத்த வர்த்தக மதிப்பு ரூ.1.53 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிஎஃப்சிசி வங்கி, பங்கு ஈவுத்தொகையைத் தொடர்ந்து 12,310,834 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை 1க்கு 35.6112550944 என்ற விகிதத்தில் பட்டியலிட்டதாக அறிவித்துள்ளது.
குறித்த பங்கு 5.75 புள்ளிகள் உயர்ந்து ரூ.135.00 ஆக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top