தங்க விலை குறித்து அதிர்ச்சி தகவல்! வர்த்தகங்கள் முடங்குமா?

Valluvan Media
0

 நேற்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் சுமார் 4,454 டொலர்கள் ஆக உள்ளது.




ஒருவேளை அனைத்து முதலீட்டாளர்களும் நாளை தங்களது தங்கத்தை விற்க முற்பட்டால், அது வரலாற்றின் மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சியை உருவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 200,000 தொன் தங்கம் ஒரே நேரத்தில் சந்தைக்கு வரும்போது, அதற்கான கேள்வி (Demand) குறைந்து வழங்கல் (Supply) அதிகரிக்கும்.இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது. 

வர்த்தக நிலையங்கள் இந்த சரிவைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் விலை குறைந்தால், சுரங்க நிறுவனங்கள், நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தங்கத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top