தாய்மார்களுக்கான விசேட கொடுப்பினவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

Valluvan Media
0

 இலங்கையில் குழந்தையுள்ள தாய்மார்கள் குறைவான வேதனத்தை பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் உலக வங்கியின் 2026 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தனியார் துறையில் மகப்பேறு விடுப்புக்கான செலவை நிறுவனங்களே ஏற்பதால், திருமணமான அல்லது குழந்தையுள்ள பெண்களை பணிக்கு அமர்த்துவதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, தாய்மார்கள் தங்களின் குடும்பப் பொறுப்புகளுக்காக அதிக நேரத்தை செலவிடுவார்கள் என்ற தவறான புரிதலே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் முக்கியமான திட்டங்கள் அல்லது தலைமைத்துவப் பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பாக, கொழும்பில் பணிபுரியும் தாய்மார்களில் பலர் முறையான ஒப்பந்தங்கள் இன்றி குறைந்த வேதனத்தில் பணிபுரிவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் பகுதிநேரம் பணி புரியும் தாய்மார்கள் சராசரியாக 13,000 ரூபாய்க்கும் குறைவான வேதனத்தையே பெறுவதாகவும், முறையான குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் இல்லாதமை அவர்களைப் பொருளாதார ரீதியாகப் பாதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தனியார் துறையில் மகப்பேறு விடுப்புச் செலவை அரசாங்கமே ஏற்கும் 'சமூகக் காப்புறுதித் திட்டத்தை' உருவாக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top