நீடிக்கிறதா? அவசர கால நிலைமை சற்றுமுன் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர், டி. என். எஸ். நந்திக சனத் குமாநாயக்க வெளியிட்டுள்ளார்.

டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டில் பொது அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப்பாதுகாப்பையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அரச கூட்டுத்தாபனம், அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளைகளால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து, வர்த்தமானி அறிவிப்பை மேலும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் சட்டென்று எகிறியது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு ஏமாற்றம்

அதன்படி, மின்சார விநியோகம், பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள், சுகாதார சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top