அரச பாடசாலைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை (314,109) ஆக குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.




2019ஆம் ஆண்டில், அரச கல்வி நிலையங்களில் (4,161,653) மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், 2025 ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு சதவீதம் குறைந்து (3,747,544) ஆக பதிவாகியுள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் 333074 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.2025-ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை (266281) ஆக குறைந்துள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை (66,739) குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், கடந்த ஏழு ஆண்டுகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top