ஈரான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் புரட்சிகர காவற்படை தளபதி உயிரிழப்பு? - இஸ்ரேல் தாக்குதலில் அதிர்ச்சி

Valluvan Media
0

 இஸ்ரேல், இன்று ஈரான் மீது நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே (Amir Nasirzadeh) மற்றும் புரட்சிகர காவற்படையின் (IRGC) தளபதி முகமது பக்பூர் (Mohammed Pakpour) ஆகியோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.




இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த இருவர் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இராணுவப் படிநிலையில் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் இருவர் ஒரே நேரத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த மரணங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top