வீதியில் வீசப்பட்ட 7 மாத கரு — காவல்துறை தீவிர விசாரணை

Valluvan Media
0

 யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீதியில் வீசப்பட்டக் கரு: காவல்துறையினா் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகரின் மையப்பகுதியில் வீதியோரத்தில் கருச்சிதைவு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். அவர் அவ்விடத்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில், சுமார் 6 முதல் 7 மாதங்கள் மதிக்கத்தக்க கரு ஒன்று வீதியில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக யாழ்ப்பாண காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீதியில் கிடந்த கருவினை ஒரு கடதாசிப் பெட்டியால் மூடி பாதுகாத்ததுடன், அவ்விடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அப்பகுதியில் நடமாடிய அந்தப் பெண், ஏதேனும் ஒரு இடத்தில் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர், சிதைந்த அந்தப் பகுதியினை வீதியில் வீசிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினா் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்யவும், சந்தேகத்திற்கு இடமான அந்தப் பெண்ணைக் கண்டறியவும் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top