இத்தாலியில் பல பொண்களுடன் சேட்டை காட்டிய இலங்கையர்! சிக்கியது எப்படி?

Valluvan Media
0

 இத்தாலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான இலங்கையர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




57 வயதான பிரபாத் எக்னலிகோட என்ற இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இத்தாலிய கிரிக்கெட் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் மரியா ஹாஸ் பாஸின் நண்பர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு தேசிய அணி வீரர் இத்தாலிய கிரிக்கெட் கூட்டமைப்பின் வீரர் பாதுகாப்பு அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டில் இது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரோமில் உள்ள பியாசலே கிளாடியோவில் உள்ள விசாரணை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விசாரணையை எதிர்கொள்ள இலங்கை பயிற்சியாளர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

தேசிய அணி பயிற்சியாளரால் பாலியல் சீண்டலுக்கான வீராங்கனை தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் தேசிய அணியைச் சேர்ந்த பல வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்குச் சொந்தமான ரோமா கிரிக்கெட் கூட்டமைப்பும் இது போன்ற போன்று பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top