திருமணத்திற்கு முதல் நாள் இரவு காதலனுடன் சென்ற மணமகள்; மாப்பிள்ளைக்கு நடந்தது என்ன?

Valluvan Media
0

 இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் நடைபெறவிருந்த ஆடம்பரத் திருமணமொன்று, மணமகளின் திடீர் முடிவால் இறுதி நேரத்தில் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கனடாவில் வசிக்கும் இளைஞருக்கும், இலங்கையில் குறித்த பிரதேசமொன்றை சேர்ந்த யுவதிக்கும் இரு வீட்டாரின் முழுச் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காகப் பல கனவுகளுடன் கனடாவிலிருந்து கொழும்புக்கு வருகை தந்த மாப்பிள்ளை, திருமண நாளன்று உரிய நேரத்திற்கு மண்டபத்திற்குச் சென்றிருந்தார்.

ஆனாலும் மணப் பெண் வரவில்லை. நீண்ட நேரமாக மணமகன் மேடையில் காத்திருந்தார். மறுபுறம் பெண் வீட்டார் மிகுந்த பதற்றத்துடனும் பரபரப்புடனும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.

சந்தேகமடைந்த மாப்பிள்ளை வீட்டார் தொலைபேசியில் விசாரித்த போதெல்லாம், "இதோ மணமகள் வந்துகொண்டிருக்கிறார்" என்றே பெண் வீட்டார் சமாளித்து வந்துள்ளனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் மணமகள் வராததால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

திருமணத்திற்கு முதல் நாள் இரவே, மணமகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரியவந்தது.

இரவிரவாகப் பெண் வீட்டார் பல இடங்களிலும் தேடியும் மணமகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எப்படியும் மகளைக் கண்டுபிடித்து மண்டபத்திற்கு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில், இந்த விடயத்தை அவர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர்.

முன்னதாகவே தமது மகளுக்குக் காதல் விவகாரம் இருப்பதை அறிந்த பெற்றோர், அதனை மாப்பிள்ளை வீட்டாரிடம் மறைத்து, அவசர அவசரமாகத் திருமணம் முடித்து கனடாவிற்கு அனுப்பிவிடத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இறுதியில், திருமணத்திற்கு வருகை தந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் நடந்த விபரம் அறிந்து தமக்குள் கிசுகிசுத்தவாறே மண்டபத்திலிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

பல ஆயிரம் மைல்கள் தாண்டித் திருமணக் கனவுடன் வந்த மாப்பிள்ளை, பெரும் ஏமாற்றத்துடன், கொழும்பில் தனது பெற்றோருடன் தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இறுதியில், நடந்த உண்மையை அறிந்த மாப்பிள்ளை வீட்டார், நாகரிகம் கருதிப் பெண் வீட்டாருடன் எந்தவொரு வாய்த் தர்க்கத்திலும் ஈடுபடாமல், ஆனால் மனதுக்குள் மிகுந்த வேதனையுடன் வெதும்பியவாறே மண்டபத்திலிருந்து அமைதியாக வெளியேறினர்.

மறுபுறம், தமது மகளின் காதல் விவகாரத்தை மறைத்துத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததை எண்ணி அவமானமும் மனவேதனையும் அடைந்த பெண் வீட்டார், நிலைகுலைந்து குளறி அழுத காட்சியை மண்டபத்திற்கு வந்திருந்த ஊராரும் உறவினர்களும் பெரும் வியப்புடனும் சுவாரசியத்துடனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top