வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள்:
- வெள்ளைப்பூண்டு: ரூ. 649 (ரூ. 50 குறைப்பு)
- பெரிய வெங்காயம்: ரூ. 224 (ரூ. 35 குறைப்பு)
- உருளைக்கிழங்கு: ரூ. 239 (ரூ. 20 குறைப்பு)
- நிலக்கடலை: ரூ. 869 (ரூ. 10 குறைப்பு)
- வெள்ளை பச்சை அரிசி: ரூ. 187 (ரூ. 9 குறைப்பு)
- பயறு: ரூ. 844 (ரூ. 5 குறைப்பு)
- சிவப்பு பச்சை அரிசி: ரூ. 169 (ரூ. 4 குறைப்பு)
- வெள்ளை நாடு அரிசி (உள்ளூர்): ரூ. 197 (ரூ. 2 குறைப்பு)
- கடலை: ரூ. 327 (ரூ. 2 குறைப்பு)
- உழுந்து: ரூ. 864 (ரூ. 1 குறைப்பு)
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பொதுமக்கள் இந்தத் தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலைகள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
