2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09.08.2026) நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இதன் பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலவரம் குறித்த முக்கிய தரவுகள்:
- பரீட்சை மையங்கள்: நாடளாவிய ரீதியில் மொத்தம் 2,723 பரீட்சை நிலையங்களில் இம்முறை பரீட்சை இடம்பெற்றது.
- பரீட்சார்த்திகள்: இப் பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 294,089 ஆகும்.
பெறுபேறுகள் வெளியீடு:
பரீட்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளதை அடுத்து, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஒரு மாத காலத்திற்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
