கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை, இன்றுடன் (8.7.2026) நிறைவடைய உள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
கடந்த ஜூன் 25 ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என அனைத்துப் பரீட்சார்த்திகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பரீட்சார்த்திகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், குறித்த இணையத்தளம் மூலமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைவதால், மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
