இலங்கையில் தீவிரமடையும் நோய்நிலைமை! சுகாதார துறையின் எச்சரிக்கை

Valluvan Media
0

 இலங்கையில் சுகாதாரத் துறையில் இரண்டு முக்கிய சவால்கள் அதிகரித்துள்ளன. 



ஒன்று தோல் நோய்களின் பரவல், மற்றொன்று டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு. இது குறித்து சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

​தோல் நோய்கள் குறித்த எச்சரிக்கை:

​நாட்டில் தோல் நோய்கள் தற்போது தீவிரமான சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகத் தோல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்துச் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தோல் நோய் வைத்தியர் நயானி மதரசிங்க, கடந்த சில நாட்களாக தோல் நோய்களுக்கான சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். எனவே, வேகமாகப் பரவிவரும் தோல் நோய்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

​டெங்கு அபாயம்:

​இதேவேளை, டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,000 புதிய டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளமை கவலையளிப்பதாக உள்ளது.

​சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைகளை முறையாகப் பின்பற்றி, தனிநபர் சுகாதாரத்தைப் பேணுவதோடு, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top