வானிலையில் அதிரடி மாற்றம்: திணைக்களம் வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

Valluvan Media
0

 சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



 நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

​பலத்த காற்று எச்சரிக்கை:

​மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குப் பிரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​கடல் பிராந்தியங்களுக்கான எச்சரிக்கை:

​சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

​குறிப்பாக, காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களும், ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களும் மணிக்கு 55 - 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடிய சந்தர்ப்பங்களில் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

​நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும் என்பதால், இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களையும் கடல்சார் சமூகத்தினரையும் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top