2026 ஜூலை மாதத்திற்கான அஸ்வசும நலன்புரி உதவித் தொகை தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, அஸ்வசும உதவித் தொகையை வழங்கும் பணிகளுக்கான கணினி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலாம் கட்டப் பயனாளிகள்:
முதலாம் கட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவு விபரங்கள் தற்போது கணினி அமைப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால், தமக்குரிய பணம் வங்கிக் கணக்குகளுக்கு வந்துள்ளதா அல்லது கொடுப்பனவுகளில் ஏதேனும் குறைபாடுகள் (வெட்டுக்கள்) உள்ளதா என்பதை பயனாளிகள் தற்போது தாராளமாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இரண்டாம் கட்டப் பயனாளிகள்:
இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவு விபரங்கள், இன்னும் ஓரிரு நாட்களில் கணினி அமைப்பில் பதிவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இது தொடர்பான மேலதிக விபரங்களை உரிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஊடாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல் அறியாத ஏனைய பயனாளிகளுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்து உதவுங்கள்.
