A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Valluvan Media
0

 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



​அனுமதி அட்டைகள் விநியோகம்:

  • பாடசாலை விண்ணப்பதாரர்கள்: இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்துப் பாடசாலை அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றுக்குப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள்: தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

​அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் முறை:

​அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை ஆன்லைன் (Online) மூலம் திருத்திக்கொள்ளத் திணைக்களம் சந்தர்ப்பம் அளித்துள்ளது:

  • பாடசாலை விண்ணப்பதாரர்கள்: அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்துத் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
  • தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள்: தேசிய அடையாள அட்டை இலக்கத்தை இணையத்தளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் தமக்குரிய திருத்தங்களை ஆன்லைனில் செய்துகொள்ளலாம்.
  • இறுதித் திகதி: அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். இந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைத் திணைக்களம் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது.

​மேலதிக தகவல்களுக்கு:

​இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விசாரணைகள் இருப்பின், பின்வரும் இலக்கங்கள் மற்றும் முகவூரிகளுடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்:

  • உடனடி அழைப்பு இலக்கம்: 1911
  • தொலைபேசி இலக்கங்கள்: 011-2784208 / 011-2784537
  • தொலைநகல் (Fax) இலக்கம்: 011-2784422
  • மின்னஞ்சல் முகவரி: gcealexamsl@gmail.com

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top