வானியல் மாற்றங்களின்படி, ஜூலை மாதத்தில் ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் மீது, மீன ராசியில் இருக்கும் சனி பகவானின் 3 ஆம் பார்வை விழுகிறது. இந்த அபூர்வ கிரகப் பார்வை ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.
இந்த கிரக மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் நிலையில், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும் பெரும் யோகத்தையும் திடீர் அதிர்ஷ்டங்களையும் பெறப்போகிறார்கள். அவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.
ரிஷபம்:
சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.
- நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- நீங்கள் வகுக்கும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல லாபத்தையும் வெற்றியையும் எதிர்பார்க்கலாம்.
கன்னி:
சனியின் 3 ஆம் பார்வை செவ்வாய் மீது விழுவது, கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
- பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- நிதி ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கான வலுவான வாய்ப்புகள் உருவாகும்.
- தொழிலை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் பிறக்கும்; வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்:
செவ்வாய் மீது விழும் சனியின் 3 ஆம் பார்வையால், மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமான காலமாகும்.
- நிதி நிலைமை மிகவும் சிறப்பாகவும், வலுவாகவும் இருக்கும்.
- நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் உங்களுக்குத் தேடி வரும்.
- நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதோடு, பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
