இலங்கையின் 2027 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
2027 ஆம் ஆண்டின் முக்கிய விடுமுறை நாட்கள்:
நாட்டின் பல்லின கலாசாரம் மற்றும் மத நல்லிணக்கத்தை மதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் சில முக்கிய தினங்கள் பின்வருமாறு:
- தமிழ் தைப்பொங்கல் தினம்: ஜனவரி 15
- சுதந்திர தினம்: பெப்ரவரி 04
- சிங்கள, தமிழ் புத்தாண்டு: ஏப்ரல் 14
- மே தினம்: மே 01
- வைகாசி விசாகப் பூரணை தினம்: மே 19
- தீபாவளித் திருநாள்: ஒக்டோபர் 28
- நத்தார் தினம்: டிசம்பர் 25
இலங்கையின் நீண்டகால பாரம்பரியத்திற்கு அமைய, அனைத்து பூரணை தினங்களும் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாகத் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மதப் பண்டிகைகளும் இப்பட்டியலில் முறையாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

